குழந்தைகளின் திரை நேரத்தைக் குறைப்பது எப்படி?

காற்று மாசு

மும்பையிலுள்ள மனநல மருத்துவர் டாக்டர் ஹரிஷ் ஷெட்டியிடம் சிகிச்சைக்கு வந்த ஏழு வயது சிறுவனுக்கு ஒரு பிரச்சனை. மற்ற குழந்தைகளுடன் சண்டைக்குப் போவான். அவனுக்கென்று நண்பர்களே கிடையாது. வகுப்பில் பதற்றத்துடன் இருப்பான் அல்லது பாடம் நடந்து கொண்டிருக்கும்போது தூங்கிவிடுவான். ஆசிரியர்கள் அடிக்கடி பெற்றோர்களை அழைத்து புகார் கூறுவார்கள். இறுதியாக ஒரு மருத்துவமனையில் சேர்த்து நன்னடத்தை சிகிச்சை (Behavioural Therapy) அளிப்பதென முடிவு செய்தார்கள்.

நுணுக்கமான பரிசோதனைகள் செய்தபிறகு அளவுக்கதிகமான நேரத்தை அவன் திரைநேரமாகக் கழிப்பதுதான் அவனது கோளாறுகளுக்கெல்லாம் காரணம் என டாக்டர் ஷெட்டியும் உடன் பணிபுரிபவர்களும் கண்டுபிடித்தனர். ஐபேட், ஃபோன், டிவி திரைகளில் அவன் பல மணி நேரம் கழிப்பது வழக்கம். சிறுவனுக்கு இரண்டு வயது ஆகும்போதே ஒரு ஐபேட் வாங்கிக் கொடுத்தோம் என்று அவனது பெற்றோர் பெருமையாகக் கூறியபோது டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஐபேடில் ஒரு கார்ட்டூனையோ வேறு வீடியோவையோ அவன் வெறித்துப் பார்த்தபடி இருக்கும்போதுதான் உணவு அவனுள் இறங்கும். நாளாக ஆக, ஐபேடில் அவன் செலவழிக்கும் நேரம் அதிகரித்துக் கொண்டே போனது. விளைவாக, வீட்டைவிட்டு வெளியேறி மற்ற குழந்தைகளுடன் அவன் விளையாடுவது கிடையாது. அவனது குடியிருப்பிலோ பள்ளியிலோ யாரையுமே அவன் நண்பர்களாக்கிக் கொள்ளவில்லை என்றனர் பெற்றோர்கள்.

Read More ...

Related Post