காற்று மாசு

காற்று மாசு

தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்திலிருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்கள் காற்று மாசிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகமூடிகளை அணிந்துகொண்டு பாதி விளையாட்டிலேயே வெளியேறியது தில்லியின் வரலாற்றில் மோசமானதொரு அத்தியாயம்தான். பருவமழை தவறுமே தவிர, பனிமூட்டம் தில்லி மாநகரை மூடிக் கொள்வது மட்டும் தவறவே தவறாது. ஒவ்வொரு வருடமும் தவறாமல் தொடரும் கொடுமையாக அது மாறிவிட்டிருக்கிறது.

2011-ம் ஆண்டில் லஞ்ச ஊழலுக்கெதிரான பேரணிகள், 2012-ம் ஆண்டில் ‘நிர்பயா’ கொடுமையான பலாத்காரத்திற்கு ஆளானதை எதிர்த்த இயக்கங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். ஆனால் காற்று மாசுபடுதலுக்கு எதிராக நடைபெறும் எதிர்வினை அவரவர் வீட்டோடு நின்று போய்விடுகிறது. மக்கள் ராம்லீலா மைதானத்திற்கோ ஜந்தர் மந்தருக்கோ வராமல் வாட்ஸ்அப் பகிர்வுகளோடு நிறுத்திக் கொள்கிறார்கள். தில்லி மராத்தான், இலங்கைக்கு எதிரான கிரிக்கெட்

Read More ...

Related Post