முடி உதிர்வைத் தடுக்க..

முடி உதிர்வைத் தடுக்க..

கருஞ்சீரகம்... இந்த மூலிகைத் தாவரம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. சமஸ்கிருதத்தில் `கிருஷ்ண ஜீரகா’, `குஞ்சிகா’, `உபகுஞ்சிகா’, `உபகுஞ்சீரகா’ என்றும், ஆங்கிலத்தில் `Black cumin’, `Small Fennel’ என்றும் சொல்வார்கள். மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள `தைமோகுயினன்' (Thymoquinone) என்ற வேதிப்பொருள் வேறு எந்தத் தாவரத்திலும் இல்லை. இது, நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. இதில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்புக் குறைய உதவும். மேலும், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் இதில் உள்ளன.

சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம், வீக்கம் தணிக்க உதவும். ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள் நெருங்காமல் உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும். இதயநோய், புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக கருஞ்சீரகம் கருதப்படுகிறது. இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும்.

Read More ...

Related Post