பண்டைய பெருவழியில் கீழவளவு

  பண்டைய பெருவழியில் கீழவளவு, மதுரை மேலூர் அருகிலுள்ள கீழவளவு ஊரின் சிறப்புகள்

அறிவு சார்ந்த அறவழி இயக்கமான சமணம், மதுரையில் கி.மு. 300லிருந்தே வளர ஆரம்பித்ததை மதுரையைச் சுற்றியுள்ள பதினெட்டு குறுமலைகளில் உள்ள பிராமி கல்வெட்டுகளும் சமணப் படுக்கைகளும் உறுதி செய்வதை நாம் நன்கு அறிவோம். இந்த பதினெட்டு மலைகளில் `கீழவளவு' முக்கியமானது. மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் கீழையூரை அடுத்து கீழவளவு அமைந்துள்ளது. இவ்வூருக்கு மேற்கில் பஞ்சபாண்டவர் மலை என்று அழைக்கப்படும் சிறிய குன்று உள்ளது. இதில் வளவளப்பான கற்படுக்கைகள் உள்ள இயற்கையான குகைத்தளங்கள் காணப்படுகின்றன. மலையில் மேற்புறம் மேற்கு நோக்கி உள்ள குகைத்தளத்தில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து பதினோராம் நூற்றாண்டு வரை சமண முனிவர்கள் வாழ்ந்துள்ளனர்.

Read More ...

Related Post