தெளிந்த நீர் குளம் இன்றில்லை..

தெளிந்த நீர் குளம் இன்றில்லை..

மதுரை மாவட்டத்திலுள்ள வரலாற்றுப் பெருமையுள்ள ஊர்களில் ஒன்று மேலத்திரு மாணிக்கம். பண்டைய வணிக பெருவழியில் உள்ள இவ்வூரின் பழம்பெருமையைப் பறைசாற்றும் கோயிலாக அங்குள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் திகழ்கின்றது. இக்கோயிலுள்ள கல்வெட்டுகளில் இவ்வூர் தென்முட்டநாட்டைச் சார்ந்த பழமையான ஊராக குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டுக்களில் இவ்வூரின் பழம் பெயர் திரு மணிக்கயம் என்று குறிப்பிடப்படுகிறது. மணிக்கயம் என்பதற்கு தெளிந்த நீரை உடைய குளம் என்று பொருள். இதுவே பிற்காலத்தில் திருமாணிக்கம் என்று மாறிவிட்டது. ஒருவேளை தெளிந்த நீர் மாறிவிட்டதோ என்னவோ? இவ்வூரிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பின்னர் பாண்டிய மன்னர்களாலும் மதுரை நாயக்க மன்னர்களாலும் திருப்பணி செய்யப்பட்டது.

Read More ...

Related Post